வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

நடிகை பூஜா குமாரின் அழகு ப்ளஸ் ஆரோக்கிய ரகசியம்!

By சினேகா| Published: 18th August 2018 10:00 AM

 

நடிகர் கமலுடன் உத்தமவில்லன்,  விஸ்வரூம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் பூஜா குமார். 40 வயதுக்கு மேல் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பதன் காரணம் தனது உடலை ஆரோக்கியமான பராமரிப்பதால்தான். தனது ஹெல்த் சீக்ரெட்ஸ் பற்றி கூறுகிறார் பூஜா.

'என்னோட ஆரோக்கியத்தின் ரகசியம் ரொம்ப சிம்பிள். அரிசி சாதத்தை அறவே தவிர்த்துட்டேன். கோதுமைக்கும் தடா தான். கஞ்சி, ஜூஸ் போன்ற திரவ உணவுகள் தான் அதிகமா எடுத்துக் கொள்வேன். நிறைய தண்ணீர் குடிப்பேன். பழரசம் எதுவானாலும் எனக்கு பிடிக்கும். நான் சுத்த சைவம். காய்கறி, பழங்கள் நல்ல சாப்பிடுவேன். சூப், சாலட் தவிர்க்க மாட்டேன். இதுக்கு முன்னால் எடை அதிகம் இருந்ததால், 25 வாரங்கள் சாலன்ஜ் எடுத்துக்கிட்டேன், 25 கிலோ குறைச்சேன். ஜாக்கிங் தினமும் பண்ணினேன். ஒரு ஆப் உதவியோடு என்னால பழையபடி ஸ்லிம் ஆக முடிஞ்சுது. 

இது தவிர தினமும் யோகா செய்வேன். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே மாட்டேன். மனதை எப்பவும் மகிழ்ச்சியா வைச்சிருப்பேன். ரொம்ப டென்ஷன் ஆக மாட்டேன். நல்லது கெட்டது என லைஃப்ல எல்லாமும் இருக்கும். அது நடிகையா இருந்தாலும் சரி, யாரா இருந்தாலும் சரி வாழ்க்கை எப்பவும் ஒரே சீரா இருக்காது. அதையெல்லாம் உணர்ந்து பேலன்ஸ் செய்து அதுக்கேத்தபடி வாழ்க்கையை சுகமா ஆக்கிக்கணும். அதான் சீக்ரெட்’ என்றார் பூஜா.

Tags : pooja kumar health beauty tips பூஜா குமார் கமல் ஹெல்த் ப்யூட்டி சீக்ரெட்ஸ்

More from the section

தோனியின் ஃபிட்னஸ் ரகசியம்
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்லிம் ரகசியம் இதுதான்! (விடியோ)
உடல் நலம் பேணுங்கள்! கிரிக்கெட் வீரர் தோனி இளைஞர்களுக்கு அறிவுரை!
ஃபிட்டாக இருக்க உலக அழகி மனுஷி பின்பற்றும் உணவு பழக்கம் இதுதான்!
அரிசி உணவு, ரொட்டி, இனிப்பு கிடையாது: பாக். வீரர் ஹசன் அலியின் டயட்!