ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆண்கள் என்ன செய்யவேண்டும்?

அப்பாவாக விரும்பும் ஆண்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் படுக்கைக்குச் சென்றால்
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆண்கள் என்ன செய்யவேண்டும்?

அப்பாவாக விரும்பும் ஆண்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் படுக்கைக்குச் சென்றால் அவர்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது ஆண்களுக்கான பிரத்யேக ஆராய்ச்சி.

மேற்கொண்டு இந்த ஆய்வு தெரிவிப்பது என்னவென்றால், ஆண்களுக்கு இரவு 8 மணியிலிருந்து 10 மணிக்குள் விந்தணுக்களின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும், அதாவது விந்தணுக்கள் கருமுட்டையுடன் வேகமாக இணைந்து கருவை உருவாக்கும்.

அதே சமயம் நள்ளிரவு தாண்டி தூங்கச் செல்லும் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையில் குறைந்தும், வலுவிழந்தும் போகும். ஆறு மணி நேரத்துக்கும் அதற்கு குறைவாகவும் தூங்கும் ஆண்களின் நிலைமையும் விடிந்தும் அதிக நேரம் படுக்கையில் இருப்போர்களின் நிலைமையும் இதைவிட மோசம். அவர்களின் விந்தணுக்கள் விரைவில் இறந்துவிடும்.

இரவு தாமதமாக படுக்கைக்குச் செல்வது, உடலுக்குத் தேவையான ஓய்வை தர மறுப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடுகள் ஏற்படும்.  காரணம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பிலிருந்து உருவாகும் ஒருவகை புரதம் விந்தணுக்களுக்கு எதிராக செயல்பட்டு ஆரோக்கியமான விந்தணுக்களை அழித்துவிடும் என்கிறார்கள் சீனாவில் உள்ள ஹார்பின் மெடிக்கல் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வறிக்கையை டெய்லி மெயிலில் நேற்று (14 மே, 2017, சனிக்கழமை) அன்று வெளியிட்டுள்ளார்கள்.

இதற்கு முந்தைய ஆய்வில், ஆறு மணி நேரம் மட்டும் தூங்கும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை, எட்டு மணி நேரம் நன்றாக தூங்கும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை விட 25 சதவிகிதம் குறைவாக இருந்தது என்று கண்டறிந்தனர்.

மெடிக்கல் சயின்ஸ் மானிட்டர் என்ற பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆய்வுக் குழுவினர் இதற்காக 981 ஆண்களை தேர்வு செய்தனர். அவர்களில் சிலரை தினமும் 8 மணியிலிருந்து பத்தி மணிக்குள் தூங்கிவிடும்படியும், சிலரை நள்ளிரவில் தூங்கும்படியும், இன்னும் சிலரை நள்ளிரவுக்குப் பிறகு தூங்கும்படியும் அறிவுறுத்தினார்கள். அவர்களின் அலாரத்தை ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துக்கும், சிலரை ஆறு மணி நேரத்துக்கும் இன்னும் சிலரை ஒன்பது மணி நேரம் கழித்தும் அடிக்கும்படியாக வைக்கச் சொன்னார்கள். குறிப்பிட்ட சில நாள்கள் கழித்து அவர்களின் விந்து எண்ணிக்கை, வடிவம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகுதான் மேற்சொன்ன ஆய்வு முடிவுக்கு வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com