பூரி எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

தொண்டை வலி நீங்க, உப்பை வெந்நீரில் கரைத்து தொண்டைக்குள் படும்படி கொப்பளித்து வர விரைவில் தொண்டைப் புண் ஆறும்.
பூரி எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

 மருத்துவ டிப்ஸ்!

  • தொண்டை வலி நீங்க, உப்பை வெந்நீரில் கரைத்து தொண்டைக்குள் படும்படி கொப்பளித்து வர விரைவில் தொண்டைப் புண் ஆறும்.
  • ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் ஆரஞ்சு, பச்சை திராட்சைப் பழங்களை உண்டு வர கட்டுப்படும்.
  • சாத்துக்குடி, ஆரஞ்சுப் பழச்சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்திட இருமல், ஆஸ்துமா குணமாகும்.

 - ஆர்.கே.லிங்கேசன்,  மேலகிருஷ்ணன்புதூர்

டிப்ஸ்....டிப்ஸ்...டிப்ஸ்

  • தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சாதங்களைத் தயாரிக்கும் போது பொட்டுக்கடலையை வறுத்துச் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
  • வெந்தயக் கீரையை சமைக்கும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து சமைத்தால் அதிலுள்ள கசப்புச் சுவை நீங்கி விடும்.
  • பூரி செய்யும் போது மாவை நீண்ட நேரம் ஊற வைக்காமல் உடனே பூரி செய்தால் பூரி எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
  • தக்காளி சாஸ் தயாரிக்கும் போது அதன் இயற்கையான நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால், அடுப்பில் இருந்து இறக்கிய பின்புதான் உப்பு சேர்க்க வேண்டும்.
  • பச்சை மிளகாய் ஒரு வாரம் கெட்டுப் போகாமல் இருக்க அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அத்துடன் சிறிது மஞ்சள் பொடியும் சேர்த்து காற்று புகாமல் இறுக்கி மூடி விடவும். பச்சை மிளகாய் வாடாது, வதங்காது.
  • ஒரு முறை கொதித்து காய்ச்சி இறக்கியப் பாலை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடக் கூடாது. ஆறிப் போய் இருந்தால் தேவையான அளவுக்கு சூடு படுத்திக் கொள்ளலாம்.
  • பழுக்காத தக்காளிகளுடன் ஒரு பழுத்த தக்காளியைப் போட்டு வைத்தால் மற்றவை சீக்கிரம் பழுத்துவிடும்.

 - எல். நஞ்சன், நீலகிரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com