இந்தியா

தில்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா

தினமணி

தில்லி மருத்துவமனையில் 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சை முடிந்து தனது இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பினார். அவரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் சோனியா காந்தி கடந்த 2-ஆம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு இடது தோள் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, வாரணாசி பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு தில்லிக்கு சோனியா காந்தி திரும்பினார்.
அறுவை சிகிச்சை: தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முதலில் அவர் அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அந்த மருத்துவமனையில் சோனியா காந்திக்கு இடது தோளில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதையடுத்து, மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்துக்கு திரும்பினார். அவரை ஓய்வெடுக்கும்படி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சோனியா காந்திக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் தலைவர் டி.எஸ். ராணா கூறியதாவது:
மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி செல்லும்போது, அவரது உடல்நிலை சீராக இருந்தது. அவரை ஓய்வெடுக்கும்படியும், மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளோம்.
வரும் வாரத்தில் அவர் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக மீண்டும் வருவார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT