நீதிபதிகள் நியமன விவகாரம்: மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் தரும் பரிந்துரைகளை நிராகரிக்க கொலீஜியம் முடிவு?

நீதிபதிகள் பணியிடத்துக்காக, நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) பரிந்துரை செய்யும்

புது தில்லி: நீதிபதிகள் பணியிடத்துக்காக, நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) பரிந்துரை செய்யும் நபர்களை நிராகரிக்கும் அதிகாரம் உள்பட மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் தரும் பல்வேறு பரிந்துரைகளை "கொலீஜியம்' குழு ஏற்றுக் கொள்ளாது எனத் தெரிகிறது.
நீதிபதிகள் நியமன முறை தொடர்பாக, திருத்தப்பட்ட வழிகாட்டும் நெறிமுறைகள் அடங்கிய வரைவுக் குறிப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான "கொலீஜியம்' குழுவிடம் மத்திய சட்ட அமைச்சகம், கடந்த 3-ஆம் தேதி அளித்தது.
அந்த வரைவுக் குறிப்பில், நீதிபதி பணியிடத்துக்கு கொலீஜியம் குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட ஒருவரை, பொதுமக்கள் நலன் கருதியும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் நிராகரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழிகாட்டும் நெறிமுறைகளை இறுதிசெய்வதற்காக, கொலீஜியம் குழு விரைவில் கூடி முடிவு செய்யவுள்ளது.
இதற்கு முன்பு, மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஒரு வழிகாட்டும் நெறிமுறைகள் அடங்கிய வரைவுக் குறிப்பை கொலீஜியம் குழுவுக்கு அனுப்பியிருந்தது. அதில், கொலீஜியம் குழு ஒருமுறை பரிந்துரை செய்து நிராகரிக்கப்பட்ட நபரின் பெயரை மறுமுறை பரிந்துரை செய்யக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய வரைவுக் குறிப்பில், ""நீதிபதி பணியிடத்துக்கு கொலீஜியம் குழு பரிந்துரை செய்த நபரை நிராகரித்ததற்கான காரணத்தை அந்தக் குழுவுக்கு தெரிவிக்கப்படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் தொடர்பாக, கொலீஜியம் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு தவறியதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அதிருப்தி தெரிவித்ததுடன் இந்த விவகாரத்தில் தாம் தலையிட வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தது.
மேலும், நீதிபதி பணியிடங்களுக்குப் பெறப்படும் விண்ணப்பங்களை கொலீஜியம் குழுவுக்கு அனுப்பி வைப்பதற்கு முன், அவற்றைப் பரிசீலிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் பரிந்துரையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com