இந்தியா

தில்லியில் தமிழக விவசாயிகள் தாலியறுக்கும் போராட்டம்!

DIN

புது தில்லி: தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள், தங்களை இதுவரை கண்டுகொள்ளாத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 33-வது நாளான இன்றைய போராட்டத்தில் தாலி கட்டி பின்னர் அதை அறுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14-ம் தேதி முதல் தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில், பயிர் கடன் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஒவ்வொரு நாளும், தார் சாலையில் உருண்டும், விவசாயிகள் காலில் கயிறை கட்டிக் கொண்டு தரையில் உருண்டும், குட்டிக் கரணம் போட்டும், ஒரு பக்க மீசை எடுத்தும், எலிக்கறி, பாம்புக் கறி உண்ணும் போராட்டம், சேலை அணிந்தது என தினந்தோறும் வித்தியாசமான முறையில் நூதனப் போராட்டங்களை விவசாயிகள் நடத்தியும், இதுநாள் வரை, மத்திய அரசு சார்பில் பிரதமரோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ யாரும் அவர்களை சந்திக்காதது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது விவசாயிகளை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.

தொடர்ந்து, கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் மாற்றாந்தாய் மனப்போக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதால், தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 33-வது நாளாக நீடிக்கிறது. இன்றைய போராட்டத்தில் தமிழக விவசாயிகள், தாலி கட்டிக்கொண்டு பின்னர் அதை அறுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பிரதமர், இதுவரை சந்தித்து பேசாமல் இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளன.;

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT