இந்தியா

ஊழல்.. பிரிவினை.. பொருளாதாரத் தோல்வி: மோடி அரசுக்கு எதிராக வரிந்து கட்டும் ராகுல்

PTI

புது தில்லி: ஊழல், பிரிவினை மற்றும் பொருளாதாரத் தோல்வி ஆகியவை  மோடி அரசில உச்ச கட்டத்தில் இருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டமானது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து எம்.பிக்கள் மத்தியில் உரையாற்றிய காங்கிரஸ் கலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசில் ஊழல், மக்களிடையே பிரிவினை உண்டாக்குதல், திறமையின்மை மற்றும் பொருளாதாரத் தோல்வி ஆகியவை உச்ச கட்டத்தில் இருக்கின்றன.  

ஆளும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு கோப அலை காணப்படுகிறது. எனவே நமது கட்சி எம்.பிக்கள் கடுமையாக உழைத்து, பொதுமக்களுக்கு 'நல்ல நாள்' விரைவில் வருமென்ற  மோடியின் பொய் உறுதிமொழிக்கு  ஒரு நல்ல மாற்று தர வேண்டும்.

ஜனநாயாகம் மற்றும் சமூக நீதி பேசும் கட்சிகளுக்கும், சர்வாதிகாரம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வினை ஊக்குவிக்கும் கட்சிகளுக்குமிடையேயான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டிய பெரும் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருக்கிறது.  

அரசியலமைப்பின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் வெறுப்பு, பிரிவினை மற்றும் வன்முறை சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT