உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் சனிக்கிழமை ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் சனிக்கிழமை ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. மொத்தம் 12,240 குடும்பங்களைச் சேர்ந்த 53,401 பேர்  439 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கேரளத்தில் உள்ள 40 ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, 22 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையின் முதலாவது மதகு கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை முதல் மேலும் நான்கு மதகுகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர் இடுக்கி பகுதியில் தரையிறங்க வேண்டிய சூழலில் அங்கு மோசமான வானிலை காரணமாக வயநாடு பகுதியில் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து வயநாடு பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா முகாம்களுக்குச் சொன்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் மற்றும் வீடு, நிலம் ஆகியவற்றை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை கேரள முதல்வர் அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com