கேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு 

கேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானம் மூலம் நேரடியாக ஆய்வு செய்தார்.
கேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு 

திருவனந்தபுரம்: கேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானம் மூலம் நேரடியாக ஆய்வு செய்தார்.

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதிகளில் சாலைகள், பாலங்கள் என கட்டமைப்பு அனைத்தும் முற்றிலுமாக உருக்குலைந்து விட்டது. பலர் வீடிழந்து அவதிப்பட்டு வருகின்றனர். மாநிலத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மீண்டும் மூன்று நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையில் நீர் குறைந்தது காரணமாக அச்சம் குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையானது மீட்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்துகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து நிதி உதவி அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கேரளாவிற்குத்  தேவையான உதவிகளை தரும்படி மத்திய அரசிடம் பினராயி விஜயன் அரசு கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானம் மூலம் நேரடியாக ஆய்வு செய்தார். கொச்சியில் பாதிப்பு தொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்தார். அத்துடன் மத்திய அரசு மாநிலத்திற்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக அவர் உறுதியளித்து உள்ளதாக பினராயி  விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com