கேரளாவுக்கு உதவுவோம்: உங்களால் முடிந்ததை கொடுத்து உதவ இதோ ஒரு வாய்ப்பு

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கன மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலமே உருகுலைந்து போயுள்ளது.
கேரளாவுக்கு உதவுவோம்: உங்களால் முடிந்ததை கொடுத்து உதவ இதோ ஒரு வாய்ப்பு


சென்னை: கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கன மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலமே உருக்குலைந்து போயுள்ளது.

கேரளத்தில் கனமழை காரணமாக தொடர்ந்து இக்கட்டான சூழல் நிலவுவதாகவும், 50,000 குடும்பங்களைச் சேர்ந்த 2.23 லட்சம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 

பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் மேற்கண்ட தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, முகாம்களில் தங்கியுள்ள மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை நிலவுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

எனவே நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் கேரள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையும் 2015ம் ஆண்டு இதேப்போன்ற ஒரு நெருக்கடி நிலையை சந்தித்தது. அப்போது நீண்ட உதவிக் கரங்கள் இன்று வரை வரலாற்றில் முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது நாம் கேரளாவுக்கு உதவும் நேரம் இது. 

எங்களது நிறுவனத்தின் இரண்டு அலுவலகங்களில் நிவாரணப் பொருட்களை சேமித்து, கேரளாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். எனவே உங்களால் இயன்ற பொருட்களை இந்த இடங்களில் சேர்ப்பித்தால் அது கேரளாவில் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்பதை உறுதி செய்து கொள்கிறோம்.

உதவும் எண்ணம் உடையவர்கள் தங்களால் இயன்ற பொருளை கொடுத்து உதவலாம்.

தேவைப்படும் பொருட்கள்

படுக்கை விரிப்பு
பெட்ஷீட், டவல்
லுங்கி / வேட்டி
சட்டை / பனியன்
புடவை / நைட்டி
உள்ளாடைகள் (பல அளவுகளில்)
பல் தேய்க்கும் பிரஷ் (குழந்தைகள் / பெரியவர்)
சோப்பு, ஷாம்பு
பக்கெட், ஜக்கு
துணி துவைக்கும் சோப்பு, பவுடர்
டெட்டால் / ஆன்டிசெப்டிக் லோஷன்
டார்ச், எல்இடி பல்பு
காலணிகள்
தரையை சுத்தம் செய்யும் லிக்விட்
சானிடரி நாப்கின்
விக்ஸ் / தைலம் / உடல் வலி தைலம்
லைட்டர் / தீப்பெட்டி / மெழுகுவர்த்தி
கையுறைகள், முக உறைகள்
குடை, ரெயின்கோட்
ஸ்பூன் / தட்டு/ டம்ளர்
பாய் / விரிப்பு


தேவைப்படும் உணவுப் பொருட்கள்

அரிசி (5 கி.கி, 10 கி.கி, 50 கி.கி. பாக்கெட்டுகள்)
குடிநீர் பாட்டீல்கள்
தேங்காய் எண்ணெய்
துவரம் பருப்பு (500 கிராம் / 1 கிலோ)
வேர்க்கடலை (500 கிராம் / 1 கிலோ)
பருப்பு ((500 கிராம் / 1 கிலோ)
உப்பு (500 கிராம் / 1 கிலோ)
சாம்பார் பவுடர் 
மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள்
சர்க்கரை, டீ தூள், காபி தூள்
பிஸ்கெட், ரஸ்க்
தேங்காய்
டின்னில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள்

மேற்கண்ட பொருட்களை கீழ்கண்ட முகவரியில் நேரடியாக வந்து அளிக்கலாம்.

முதல் முகவரி

எண் 52, அனைகர் அப்துல் ஷுகுர் அவென்யூ
இவிகே சம்பத் சாலை, வேப்பேரி,
பெரியமேடு, சென்னை - 600007.

இரண்டாவது முகவரி

எண் 29, எக்ஸ்பிரஸ் கார்டன்
2வது மெயின் ரோடு,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை - 600058
(அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில், எஸ்பிஐ வங்கி எதிரில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com