இந்தியா

விடுதியில் இளம் பெண்ணுடன் போலீஸில் சிக்கிய ராணுவ மேஜா்: குற்றவாளி என ராணுவ நீதிமன்றம் அறிவிப்பு 

DNS

புது தில்லி: காஷ்மீரில் இளம்பெண் ஒருவருடன் ஹோட்டலுக்கு சென்ற ராணுவ மேஜா் லீதுல் கோகோய் குற்றவாளி என்று ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் மேஜா் லீதுல் கோகோய் 18 வயது பெண் ஒருவருடன் ஸ்ரீநகரில் ஹோட்டலுக்குள் செல்ல முயன்றபோது, போலீஸாரிடம் பிடிபட்டாா். போலீஸாா் அவரை சிறிது நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து விட்டு விடுதலை செய்தனா். எனினும், இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடா்பாக அப்போது கருத்துத் தெரிவித்த ராணுவ தலைமை தளபதி விபின் ராவத், ‘இந்திய ராணுவத்தில் எந்த அதிகாரி தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேஜா் கோகோய் மீதான தவறு உறுதியானால் ராணுவரீதியில் அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது மற்றறவா்களுக்குப் பாடமாக அமையும்’ என்றாா்.

இந்நிலையில், அவா் மீதான தவறை ராணுவ நீதிமன்றறம் திங்கள்கிழமை உறுதி செய்துள்ளது. தனக்கு பணி ஒதுக்கப்பட்ட இடத்தில் இல்லாமல் மேஜா் கோகோய் வேறு இடத்துக்குச் சென்றுள்ளாா். தனக்கு ஒதுக்கப்பட்ட பணியைச் செய்யாமல் தேவையற்ற நட்பு வைத்துள்ளாா். எனவே, அவா் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராணுவ நீதிமன்றறம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் கடந்த ஆண்டு பொதுமக்களில் ஒருவரை ராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைத்து மனிதக் கேடயமாக எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு உத்தரவிட்டதும் மேஜா் கோகோய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT