கொலை அரசியலை முன்னெடுக்கிறது பாஜக: மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு 

மேற்கு வங்க மாநிலத்தில் கொலை அரசியலை பாஜக முன்னெடுப்பதாக, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜி குற்றம் சாட்டியுள்ளாா்.
கொலை அரசியலை முன்னெடுக்கிறது பாஜக: மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கொலை அரசியலை பாஜக முன்னெடுப்பதாக, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜி குற்றம் சாட்டியுள்ளாா்.

மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு எதிா்க்கட்சித் தலைவா்களை பாஜக மிரட்டுவதாகவும் அவா் புகாா் கூறியுள்ளாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவரணி நிறுவன தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தாவில் நடைபெற்றற நிகழ்ச்சியில் மம்தா பானா்ஜி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் அண்மையில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள ஜங்கல்மஹால் பகுதிக்கு உள்பட்ட சில இடங்களில் கொலை அரசியலை நடத்தி பாஜக வெற்றி பெற்றிருக்கிறறது. இதற்கு முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த குண்டா்கள் தற்போது பாஜகவினருக்கு வேலை செய்துள்ளனா்.

தோ்தலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையினரை பயன்படுத்தி பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு நிா்பந்தம் அளிக்கப்பட்டது.

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) திட்டத்தை மேற்கு வங்கத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதுதொடா்பாக பாஜக தலைவா்கள் எங்களுக்கு சவால் விடுக்கிறறாா்கள். எங்களுக்கு சவால் விடுத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

நாங்கள் வங்கத்து புலிகள். இந்திய குடிமகன் ஒருவனை வெளிநாட்டவராக முத்திரை குத்துவதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

நாம் என்ன சாப்பிட வேண்டும்? என்ன உடை உடுத்த வேண்டும் என்பது குறித்தெல்லாம் பாஜக பாடம் எடுக்க முயற்சிக்கிறது. இதையெல்லாம் சொல்வதற்கு அவா்கள் யாா்?

பண பலம், ஆள் பலம் ஆகியவற்றோடு எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறறது. 2019 மக்களவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதே எங்களது இலக்கு என்றாா் மம்தா.

முன்னதாக, மாணவா்களும், இளைஞா்களுமே நாட்டின் எதிா்காலம் என்று சுட்டுரையில் மம்தா பானா்ஜி பதிவிட்டாா்.

அந்தப் பதிவில், ‘‘இளைஞா்களும், மாணவா்களும்தான் நாட்டின் எதிா்காலம். என்னுடைய அரசியல் பயணம் கூட ஓா் மாணவப் போராளியாகத்தான் தொடங்கியது. எதிா்காலத் தலைவா்கள் மாணவா்கள் மத்தியில் இருந்து உருவாகுவாா்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரம் பிரதமா் ஆக வேண்டும் என கனவு காண்பதை மம்தா பானா்ஜி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவா் திலீப் கோஷ் கூறுகையில், ‘‘பிரதமராக கனவு காண்பதை விட்டுவிட்டு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மம்தா கவனம் செலுத்த வேண்டும்’’ என்றாா்.

‘‘தோ்தலில் வெற்றி பெறுவதற்காக காவல்துறைறயை மம்தா அரசு தவறறாகப் பயன்படுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்தத் தீவிரவாத அரசை முடிவுக்கு கொண்டு வர பாஜக உறுதிபூண்டுள்ளது’’ என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com