இந்தியா

விவசாயிகள் பெயரை வெளியிட்டு அவமானப்படுத்துவீர்கள்;தொழிலதிபர்களை?: தகவல் ஆணையர் கேள்வி

DIN

புது தில்லி: கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் பெயரை வெளியிட்டு அவமானப்படுத்தும் பொழுது, ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்களின் பெயரையும் அறிவிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சகம், மத்திய புள்ளியல் துறை மற்றும் திட்ட அமலாக்கம், ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளுக்கு மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு அனுப்பியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

அவரது சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வங்கிகளில் மிகச்சிறிய தொகையை  கடனாகப் பெற்று அதை முறையாக விவசாயிகள் திருப்பிச் செலுத்துகிறார்கள். ஆனால் இயற்கை பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் சில நேரங்களில் கடனை அவர்களால் முறையாக திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்படுறது. அப்போது கடனை வசூலிக்க அவர்களிடம் வங்கிகள் மிகவும் கடுமையாக நடந்து கொள்கின்றன. குறிப்பாக அவர்களின் பெயர்களை நாளேடுகளில் வெளியிட்டு, நோட்டீஸ்கள் அடித்து அவர்களை அவமானப்படுத்துகின்றனர்.

ஆனால், ரூ.50 கோடிக்கும் அதிகமாகக் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு இருந்தும் கட்டாமல் இருக்கும் தொழிலதிபர்களின் பெயர்களை வங்கிகளும், மத்திய அரசும் வெளியிடுவதில்லை. அதை விடுத்து ’ஒன்டைம் செட்டில்மென்ட்’ என்ற பெயரில் அவர்களுக்கு வட்டி தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளித்து அவர்களின் பெயரை வெளியிடாமல் அவர்களைப் பாதுகாக்கின்றனர்.

இந்தியாவில் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை வங்கியில் சிறிய அளவில் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்த முடியாத அவமானத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் அதிகம் படித்த தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் நாட்டை ஏமாற்றி வருகிறார்கள்.

எனவே கடனைத் திருப்பிச் செலுத்தாத சிறு விவசாயிகளின் பெயரை வெளியிட்டு அவமானப்படுத்தும் பொழுது, ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்களின் பெயரையும் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT