தேர்தல் முடிவுகள் மோடி அரசின் செயல்பாட்டுக்கானது அல்ல:  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளானது அந்தந்த மாநில அரசுகளின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய
தேர்தல் முடிவுகள் மோடி அரசின் செயல்பாட்டுக்கானது அல்ல:  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்


சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளானது அந்தந்த மாநில அரசுகளின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாட்டுக்கான மதிப்பீடு அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தற்போது வெளியாகியுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளானது, அந்தந்த மாநில அரசுகளின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாட்டுக்கான மதிப்பீடுகளாக இந்தத் தேர்தல் முடிவுகளை குறிப்பிட இயலாது.
தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகள் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறியதாவது:
மாநிலங்களில் தொடர்ந்து 3-4 முறை ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் இதுபோன்ற அரசுக்கு எதிரான மனப்பான்மை ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
எனினும், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை பாஜக ஏற்கிறது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பாஜக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளும். ஜனநாயகத்தில் கட்சிகளுக்கு ஏற்றத்தாழ்வு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் என்று ஸ்ரீபாத் நாயக் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com