வாக்கு சதவீதத்தை இழந்த பாஜக!

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வாக்கு சதவீதத்தை பெருமளவில் இழந்துவிட்டது. 
வாக்கு சதவீதத்தை இழந்த பாஜக!


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வாக்கு சதவீதத்தை பெருமளவில் இழந்துவிட்டது. 
ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது முடிந்த தேர்தலில் பாஜக சுமார் 38.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த 2013 தேர்தலில் இங்கு பாஜக 45.2 சதவீத வாக்குகளையும், 2014 மக்களவைத் தேர்தலில் 55 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. அவற்றுடன் ஓப்பிடும்போது பாஜகவுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 44.9 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் இப்போது பாஜகவின் வாக்கு சதவீதம் 41.3 ஆக குறைந்துவிட்டது.
சத்தீஸ்கரில் தான் பாஜகவின் வாக்கு பெருமளவில் குறைந்துவிட்டது. அங்கு கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 41 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2014 மக்களவைத் தேர்தலில் இது 49 சதவீதமாக அதிகரித்தது. ஆனால், இப்போது அந்த மாநிலத்தில் 32.9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பாஜக படுதோல்வியடைந்துவிட்டது.
அதே நேரத்தில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் இப்போது 43.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 40.3 சதவீத வாக்குகளையும், 2014 மக்களவைத் தேர்தலில் 38.37 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் பெற்றிருந்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பாஜகவுக்கு கிடைக்காத வாக்குகள் அனைத்தும் அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிடவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியும், சுயேச்சைகளும் இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். சத்தீஸ்கரில் கடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த முறை அஜித் ஜோகி கட்சியுடன் கூட்டணி அமைத்த பகுஜன் சமாஜ் 10.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. சுயேச்சைகள் பெற்ற வாக்குகள் 5.3 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி இப்போது 39.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 33.1 சதவீத வாக்குகளே அக்கட்சிக்கு கிடைத்தது. 2014 மக்களவைத் தேர்தலின்போது இதைவிடக் குறைவாக 30 சதவீத வாக்குகளை மட்டுமே காங்கிரஸ் பெற்றிருந்தது.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த தேர்தலில் 36.4 சதவீதமாக இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம் இப்போது 41.4 சதவீதமாக அதிகரித்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com