கூட்டத்தில் பங்கேற்கவா விஜய் மல்லையா 300 பைகளுடன் சென்றார்? அமலாக்கத்துறையின் அதிரடி கேள்வி

தலைமறைவு தொழிலதிபர் விஜய் மல்லையா ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்கவா 300 பைகளுடன் சென்றார் என்று அமலாக்கத் துறையினர் கேள்வி எழுப்பினர்.
கூட்டத்தில் பங்கேற்கவா விஜய் மல்லையா 300 பைகளுடன் சென்றார்? அமலாக்கத்துறையின் அதிரடி கேள்வி


மும்பை: தலைமறைவு தொழிலதிபர் விஜய் மல்லையா ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்கவா 300 பைகளுடன் சென்றார் என்று அமலாக்கத் துறையினர் கேள்வி எழுப்பினர்.

விஜய் மல்லையா தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மல்லையாவின் வழக்குரைஞர் அமித் தேசாய், ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்கவே  மல்லையா சென்றதாகவும், நாட்டை விட்டு தப்பியோடவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த வாதத்தைத் தவிடுபொடியாக்கும் வகையில் அமலாக்கத்துறை அதிரடி கேள்வியை எழுப்பியது. அதாவது, கூட்டத்தில் கலந்துகொள்ள செல்பவர் ஏன் 300 பைகளை கொண்டு சென்றார். ஒரே ஒரு கூட்டத்துக்காகவா 300 பைகளைக் கொண்டு சென்றார் என்று எதிர்கேள்வி எழுப்பினர்.

மேலும் அமலாக்கத் துறை தரப்பில் வாதிடுகையில், விஜய் மல்லையா இந்தியா திரும்ப மறுத்து வருகிறார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டதே. அவரை அடைக்கும் சிறையின் விடியோவைப் பார்த்தும் அவர் திருப்தி அடையவில்லை என்றே நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, 
இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன் மோசடி செய்ததாக மல்லையா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரை நாடு கடத்திக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. இந்நிலையில், அவரை நாடு கடத்துவதற்கு அனுமதியளித்து லண்டன் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. 

முன்னதாக, இந்த வழக்கு விசாரணை நிலையில் இருந்தபோது, இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காகத் தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மல்லையா கூறியிருந்தார். மல்லையாவுக்காக மும்பையில் தயார் செய்யப்பட்டுள்ள சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதால், அவரை நாடு கடத்தக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் மல்லையா தரப்பினர் வாதிட்டனர்.

இந்நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்மா ஆர்புத்நாத், மல்லையாவுக்கு எதிராகப் பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகக் கூறுவதற்கு எந்தவித அறிகுறியும் இல்லை. அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளன.

மல்லையா அடைக்கப்படவுள்ள சிறை அறையின் காணொலியைப் பார்த்ததில், அது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது. சிறையில் அவருக்கு ஏதேனும் ஒரு விதத்தில் ஆபத்து நேரிடும் எனக் கூறப்படுவதை நம்புவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com