கர்தார்பூர் வழித்தடம்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் சீக்கியர்கள் நன்றி

சீக்கியர்களின் நீண்டநாள் கோரிக்கையான கர்தார்பூர் வழித்தடத்துக்குச் செயல்வடிவம் கொடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கவாழ் சீக்கியர்கள்


சீக்கியர்களின் நீண்டநாள் கோரிக்கையான கர்தார்பூர் வழித்தடத்துக்குச் செயல்வடிவம் கொடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கவாழ் சீக்கியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சீக்கியர்களின் நீண்டநாள் கோரிக்கையான கர்தார்பூர் வழித்தடத்துக்குச் செயல்வடிவம் கொடுத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அந்த வழித்தடத்தின் வழியாக கர்தார்பூர் குருத்வாராவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கவாழ் சீக்கியர்கள் குழுவின் தலைவர் ஜஸ்தீப் சிங் கூறுகையில், கடந்த சில மாதங்களாக சீக்கியர்களுக்கு ஆதரவான பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஈடுபட்ட சிலருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது மனநிம்மதி அளிக்கிறது. 
இருப்பினும், இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
பின்னணி: சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளில் ஏறத்தாழ 18 ஆண்டுகளைத் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக எழுப்பப்பட்ட தர்பார் சாஹிப் குருத்வாரா, சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது.
அந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் நுழைவுஇசைவு (விசா) இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக இந்தியாவின் குருதாஸ்பூரையும், கர்தார்பூரையும் இணைக்கும் வகையிலான வழித்தடத்துக்கு (சாலை) கடந்த மாதம் 26-ஆம் தேதி இந்தியப் பகுதியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும், 28-ஆம் தேதி பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானும் அடிக்கல் நாட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com