குஜராத், முசாஃபர் நகர் கலவரங்களில் தொடர்புடையவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்: கேஜரிவால் வலியுறுத்தல்

2012-குஜராத் கலவரம், 2013- முசாஃபர் நகர் கலவரம் ஆகியவற்றில் தொடர்புடையவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத், முசாஃபர் நகர் கலவரங்களில் தொடர்புடையவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்: கேஜரிவால் வலியுறுத்தல்

2012-குஜராத் கலவரம், 2013- முசாஃபர் நகர் கலவரம் ஆகியவற்றில் தொடர்புடையவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1984, அக்டோபர் 31-இல் அப்போதைய  பிரதமர் இந்திரா காந்தி, அவரது மெய்ப் பாதுகாவலரால் (சீக்கியர்) சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, தலைநகர் தில்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது.  இதில், தில்லியில் மட்டும் 3,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சீக்கியப் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டனர். இந்தக் கலவரத்துக்கு நீதி கேட்டு சீக்கிய அமைப்புகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. 

இந்நிலையில், இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. இந்நிலையில், சீக்கியக் கலவரங்களுடன் தொடர்புடையவர்கள் மட்டுமல்லாமல், குஜராத் கலவரம், முசாஃபர் நகர் கலவரம் ஆகியவற்றில் தொடர்புடையவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: இந்தியாவில் வாழும் சாதாரண மக்கள் அமைதி, சகோதரத்துவத்துடன் ஹிந்து, முஸ்லிம் பாகுபாடு இல்லாமல் வாழவே விரும்புகின்றனர். ஆனால், இந்தக் கலவரங்களை அரசியல் நோக்கத்துக்காக பெரிய தலைவர்கள் செய்கின்றனர்.  சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.

இது காலம் தாழ்ந்த நீதியாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததில் மகிழ்கிறேன்.  மேலும், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துடன் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் மிக விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்.  மேலும், 2002- குஜராத் கலவரம், 2013- முசாஃபர் நகர் கலவரம் ஆகியவற்றில் தொடர்புடையவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com