இந்தியா

பாகிஸ்தான் பத்திரிகையில் பயங்கரவாதி ஹபீஸின் கட்டுரை: பத்திரிகையாளர்கள் கண்டனம்

DIN


பாகிஸ்தானின் பிரபல உருது நாளிதழில், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஹபீஸ் சயீது எழுதிய கட்டுரை வெளியானதற்கு அந்நாட்டு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதி என்றும், அவரது அமைப்புகளை பயங்கரவாத இயக்கங்கள் என்றும் ஐ.நா மற்றும் அமெரிக்கா அறிவித்தது. 
இந்நிலையில், கிழக்கு பாகிஸ்தானில்(வங்கதேசம்) இந்தியாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ஏன் பேசுவதில்லை என்பது குறித்து பயங்கரவாதி ஹபீஸ் எழுதிய கட்டுரை பாகிஸ்தானில் உள்ள உருது நாளிதழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அந்த கட்டுரையில்,  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் வங்கதேசத்தில் சிலர் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்தை பிரிக்க இந்திரா காந்தி சதி திட்டம் தீட்டியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. வங்கதேசம் உருவானதில் இந்தியாவின் பங்கு மற்றும் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்க வேண்டும் என்றும் ஹபீஸ் அதில் கூறியிருந்தார்.
இந்த கட்டுரையை வெளியிட்டதற்கு அந்த நாளிதழ் நிறுவனத்துக்கு பத்திரிகையாளர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதி என்று அறிவித்த ஒருவரின் கட்டுரையை எவ்வாறு வெளியிடலாம். ஹபீஸுடன் பத்திரிகை நிறுவன இயக்குநருக்கு நேரடி தொடர்பு இருப்பதால் இந்த கட்டுரை வெளியிடப்பட்டதா? அல்லது ஏதேனும் நிர்பந்தத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாய என்று அந்த உருது நாளிதழ் நிறுவனத்துக்கு பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பயங்கரவாதி ஹபீஸின் புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT