இந்தியா

'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரனை 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் மோடி 

DIN

புது தில்லி: சமீபத்தில் சென்னையில் மரணமடைந்த 'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரனை 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். 

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பிரதமர் மோடி வானொலி வழியாக  பொதுமக்களுக்கு உரையாற்றும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி நடைபெறும். 

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் மரணமடைந்த 'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரனை தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். 

அவர் தனது உரையில் பேசியதாவது:

சமீபத்தில் மறைந்த சென்னை டாக்டர் ஜெயச்சந்திரன் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எப்போதும் ஆர்வத்துடன் இருந்தார்.

இதேபோல 15,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த கர்நாடக பெண் நரசம்மாவும் ஏழைகளுக்கு சேவை புரிந்துள்ளார்.

குஜராத்தில் அமைந்துள்ள உலகின் உயரமான சர்தார்படேல் சிலையானது இந்தியாவின் ஒற்றுமைக்கான ஆதாரமாக விளங்குகிறது. 

பொதுவாகவே நமது பண்டிகைகள் கலாசாரத்தையும், விவசாயத்தையும் சார்ந்து நடைபெறுகின்றன. மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

பொதுவாகவே பண்டிகை சமயங்களில் எடுக்கப்படும் புகைப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் புகைப்படங்களை பகிர்வதன் மூலமாக இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.  

2018-ம் ஆண்டில் இந்திய மக்களுக்கு உலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் 95 சதவீத கிராமங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

இவ்வாறு மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT