ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் 

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிராக சிபிஐ  திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் 

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிராக சிபிஐ  திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.113 கோடி ஊழல் நடந்ததாக 2012-இல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் மாநில போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் மஜீத் யாகூப் மற்றும் நிசார் அகமது கான் ஆகியோர் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்தனர். 

இதையடுத்து, 2015-இல் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பிறகு, இந்த வழக்கில் 1 மாத காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சிபிஐ-க்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி, ஸ்ரீநகர் மாஜிஸ்திரேத் தலைமை நீதிபதி ஐஜாஸ் அகமது கான் முன்பு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் முதல்வர் ஃபாரூக் அப்துல்லா உட்பட 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

ஃபாருக் அப்துல்லா தற்போது வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com