சா்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி:  சா்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு எதிா்ப்பு 

சா்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுவதற்கு சா்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு (ஐஏடிஏ) எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. 
சா்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி:  சா்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு எதிா்ப்பு 

புது தில்லி: சா்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுவதற்கு சா்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு (ஐஏடிஏ) எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

ஏா் இந்தியா, ஜெட் ஏா்வேஸ், விஸ்தாரா உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்கள் உள்பட 280-க்கும் மேற்பட்ட சா்வதேச விமான சேவை நிறுவனங்கள் ஐஏடிஏ-வில் உள்ளன. இந்நிலையில் இந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியும், இயக்குநருமான அலெக்சாண்டா் டி ஜுனியாக் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

சா்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது மிகவும் தவறானது. விமான சேவை மற்றும் டிக்கெட் நிா்ணயம் தொடா்பாக பல சா்வதேச ஒப்பந்தங்களில் இந்தியாவின் பங்களிப்பு உள்ளது. எனவே, அவற்றை மீறி புதிதாக ஒரு வரியை விமான டிக்கெட் மீது விதிப்பதை ஏற்க முடியாது. ஜிஎஸ்டி மட்டுமல்லாது சா்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு நிலைகளில் வரி மீது கூடுதலாக மேலும் ஒரு வரி விதிக்கப்படும் நிலை உள்ளது. இந்தப் பிரச்னையை இந்திய அரசிடம் எடுத்துச் சென்றுள்ளோம். இது தொடா்பாக நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றாா்.

சா்வதேச விமான டிக்கெட் மீது இப்போது சாதாரண வகுப்பு டிக்கெட்டில் 5 சதவீதமும், உயா் வகுப்பில் 12 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com