பள்ளிகளில் தாய்மொழி கட்டாயப் பாடம்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

"அனைத்து மாநில அரசுகளும் தங்களது தாய்மொழியை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும்' என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
பள்ளிகளில் தாய்மொழி கட்டாயப் பாடம்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

"அனைத்து மாநில அரசுகளும் தங்களது தாய்மொழியை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும்' என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
ஆந்திர கல்விச் சங்கத்தை நிறுவிய துர்காபாய் தேஷ்முக்கின் பிறந்த தினம், தில்லியில் உள்ள அந்தச் சங்கத்துக்குச் சொந்தமான பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
நாம் அனைவரும் மாபெரும் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றுக்குச் சொந்தமானவர்கள். ஆசிரியர்களுக்கும், மூத்தவர்களுக்கும் மதிப்பளிப்பது, அனைத்து ஜீவராசிகள் மீதும் அன்பு செலுத்துவது, இயற்கையை நேசிப்பது ஆகிய நற்பண்புகள் ஒவ்வொரு இந்தியரின் மரபணுவிலும் இடம்பெறுள்ளன.
ஒரு நாகரிகத்தை கலாசார ரீதியில் பாதுகாக்க வேண்டும். அதற்காக, நாம் மொழியைப் பாதுகாக்க வேண்டியது முக்கியமாகும். ஏனெனில், ஒரு பகுதியின் நாகரிகம், மக்களின் பொதுப்பண்பு, மதிநுட்பம், நெறிமுறைகள், சமூக பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அதன் கலாசாரம் பிரதிபலிக்கிறது.
ஒருவர் மற்றொருவரின் கலாசாரத்துக்கு பரஸ்பரம் மதிப்பளிப்பதும், இதர இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்வதும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வலு சேர்க்கும். ஒருவர் தன்னால் இயன்ற அளவுக்கு எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், தனது தாய்மொழியை ஒருபோதும் புறக்கணித்துவிடக் கூடாது. அதற்காக, அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகளில் தங்களது தாய்மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
ஆந்திர கல்விச் சங்கத்தை நிறுவிய துர்காபாய் தேஷ்முக், சுதந்திரப் போராட்ட வீரர், வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர், கல்வியாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மையுடன் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர். பெண்கள் பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுபட வேண்டுமெனில், அவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதை உணர்ந்தார். பின்னர், பெண்களுக்கு கல்வி கிடைப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்தார்.
திட்டக் குழுவின் உறுப்பினராக இருந்த துர்காபாய், பல மருத்துவமனைகள், கல்லூரிகள், பெண்களுக்கான தொழிற்பயிற்சி மையங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தார். அவரது பங்களிப்பை நினைவுகூர்வது, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று ஊக்கத்தை இளைய தலைமுறையினருக்கு கொடுக்கும் என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com