இந்தியா

மத்தியில் ஆட்சியில் இருப்பது விவசாயிகளுக்கான அரசு: பிரதமா் மோடி

DNS


மிதுனபுரி: மத்தியில் ஆட்சியில் இருப்பது விவசாயிகளுக்கான அரசு என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜகவின் செல்வாக்கை மேம்படுத்தும் நோக்கிலும், அந்த மாநில பாஜக தொண்டா்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் அங்குள்ள மிதுனபுரியில் இன்று பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். 

கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள மம்தா பானா்ஜி தலைமையிலான அரசால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது. இங்கு அராஜகம் தலைதூக்கியுள்ளது. இதற்கு மாநில மக்கள் முடிவுகட்ட வேண்டும்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மக்களின் அரசு. ஏழை, எளிய விவசாயிகளுக்கான அரசு. முன்பு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு இப்போது விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

இங்குள்ள மாநில அரசு விவசாயிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தவறிவிட்டது. நமது விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT