மூன்றாவது அணி இன்னும் உருவாக்கப்படவில்லை: எச்.டி.தேவெ கெளடா

மக்களவைத் தேர்தலுக்காக மூன்றாம் அணி இதுவரையில் உருவாக்கப்படவில்லை என்று மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
மூன்றாவது அணி இன்னும் உருவாக்கப்படவில்லை: எச்.டி.தேவெ கெளடா

மக்களவைத் தேர்தலுக்காக மூன்றாம் அணி இதுவரையில் உருவாக்கப்படவில்லை என்று மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
ஹுப்பள்ளியில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றுசேர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகச் செயல்படும் என்று ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கான மூன்றாவது அணி எதுவும் இதுவரையில் உருவாக்கப்படவில்லை. 
கர்நாடக முதல்வராக குமாரசாமி, துணைமுதல்வராக ஜி.பரமேஸ்வர் ஆகியோரின் பதவியேற்பு விழாவில் தேசிய அளவிலான முக்கியமான தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆனால் மூன்றாவது அணி தெளிவுப்பட உருவாக்கப்படவில்லை. 
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கட்சிகள் பலம் வாய்ந்தவையாக உள்ளன. மூன்றாவது அணி மற்றும் தெளிவான அரசியல் நடவடிக்கைகள் மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில்தான் வெளிப்படும். கர்நாடகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி, மக்களவைத் தேர்தலுக்காக மஜதவை பலப்படுத்துவதே முதல்பணியாக உள்ளது. 
பாஜகவுக்கு எதிராக திரளும் அணிக்கு தலைமை ஏற்கும் அளவுக்குச் செல்லமாட்டேன். அரசியலில் மூத்தவனாக இருந்தாலும், மஜதவின் அரசியல் பலத்தை அறிந்திருக்கிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் மஜதவுக்கு ஏமாற்றமளிக்கும் முடிவு கிடைத்துள்ளது. அது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
ராகுலை பிரதமராக்க மஜதவுக்கு தடையில்லை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தலைமையேற்கவும், பிரதமராக்கவும் மஜதவுக்கு எந்தவித தடையும் இல்லை. மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமராக்க காங்கிரஸ் முடிவெடுத்தாலும், அதுகுறித்து மஜத கவலைப்பட போவதில்லை. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸýம், மஜதவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து உயர்மட்டத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். 
வட கர்நாடக மாவட்டங்களுக்கு அநீதியா?: கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், வட கர்நாடக மாவட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்தத்தலைவர் எச்.கே.பாட்டீல் கூறியிருக்கிறார். அமைச்சராக இருந்தபோது வட கர்நாடகத்துக்கு அவர் அளித்த பங்களிப்பு என்ன? 
1956-ஆம் ஆண்டு முதல் இதுவரை எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொள்வேன். இதுதவிர, நஞ்சுண்டப்பா அறிக்கையின் பரிந்துரையின்படி நிதி ஒதுக்குவது குறித்து சட்டப்பேரவையில் 2 நாள்கள் விவாதிக்கவும் குமாரசாமியிடம் அறிவுறுத்துவேன். லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்த முதல்வர்கள் 25 ஆண்டுகள் கர்நாடகத்தை ஆண்டுள்ளனர். வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும். அப்போதுதான் எச்.கே.பாட்டீலின் குற்றச்சாட்டுக்கு விடைகிடைக்கும். 
குமாரசாமியின் கிராம தரிசனம் எப்போது?: கிராம தரிசனம் நிகழ்ச்சியை நடத்த முதல்வர் குமாரசாமியால் இயலாது, முன்பு கிராம தரிசனம் செய்தபோது இருந்த அவரது உடல்நிலை தற்போது இல்லை. சரியாக உறங்காமல், இரவுபகலும் தொடர்ந்து குமாரசாமி உழைத்து கொண்டிருக்கிறார். 
கூட்டணி ஆட்சியில் குமாரசாமிக்குஅதிக நெருக்கடி உள்ளது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com