16 மாதங்கள்..75 மாவட்டங்கள்: உ.பி முதல்வர் யோகியின் வித்தியாசமான 'விசிட்' சாதனை

உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 75 மாவட்டங்களை தன்னுடைய ஆட்சிக்காலத்தின் முதல் 16 மாதங்களில்   'விசிட்' செய்த முதலாவது முதல்வர் என்ற சாதனையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்துள்ளார்.
16 மாதங்கள்..75 மாவட்டங்கள்: உ.பி முதல்வர் யோகியின் வித்தியாசமான 'விசிட்' சாதனை

லக்னௌ: உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 75 மாவட்டங்களை தன்னுடைய ஆட்சிக்காலத்தின் முதல் 16 மாதங்களில்   'விசிட்' செய்த முதலாவது முதல்வர் என்ற சாதனையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்துள்ளார்.

உத்தர பிரதேச மாநில முதல்வராக பாரதிய ஜனதா கட்சியின் யோகி ஆதித்யநாத் கடந்த வருடம் மார்ச் 19-ஆம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார். அப்பொழுது மாநிலத்தின் வளர்ச்சி குறித்த அவரது செயல் திட்டங்களை விவரித்த பொழுது, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பார்வையிட்டு வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவது தன்னுடைய முன்னுரிமைகளில் ஒன்று என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி அவர் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 4 அல்லது 5 மாவட்டங்களுக்கு விசிட் செய்துள்ளார்.  அதன்படி திங்களன்று அவர் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு, ரூ.155 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள 34 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டச் சென்ற பொழுது புதிய சாதனை ஒன்றைத் படைத்தார்.

இதன் மூலம் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 75 மாவட்டங்களை தன்னுடைய ஆட்சிக்காலத்தின் முதல் 16 மாதங்களிலேயே  'விசிட்' செய்த முதலாவது முதல்வர் என்ற சாதனையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும் பொழுது, ' முழுமையான தங்களது ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்திலும் மாநிலத்தின் 75 மாவட்டங்களையும் பார்வையிடாத முதல்வர்கள் இருக்கிறாரகள் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com