இந்தியா

'பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கை எதிர்கொள்ளுங்கள்' -  மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

DIN

பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறபித்த உத்தரவை எதிர்த்து தயாநிதி மாறன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தவறாகப் பயன்படுத்தி, பிஎஸ்என்எல்-இன் அதிவேக தொலைபேசி இணைப்புகளை அவரது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அரசுக்கு 1.78 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகக் கூறி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.   

பிஎஸ்என்எல் பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதிமாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவு பிறபித்தது. இந்த வழக்கில் இருந்து 3 பேர் மட்டுமே தங்களை விடுவிக்குமாறு தெரிவித்த நிலையில் சிபிஐ நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளதாக கூறி, சிபிஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில், 7 பேரும் குற்றம் இழைத்தவர்களாகவே கருத முடிகிறது. ஆகவே அவர்களை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து மீண்டும் விசாரிக்க வேண்டும்" என்று ஜூலை 25-ஆம் உத்தரவு பிறப்பித்தது. 

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தயாநிதி மாறன் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 27-ஆம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் 30-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்தவாக தெரிவித்தது. 

அதன்படி, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் தெரிவிக்கையில், 

"உங்களுடைய சகோதரரின் தொலைக்காட்சிக்கு தொலைபேசிகளை உபயோகித்துள்ளீர்கள் என்பது தான் குற்றச்சாட்டு. அதனால், நீங்கள் வழக்கை எதிர்கொள்ளுங்கள். இந்த விவகாரம் கீழமை நீதிமன்றத்தில்  வைத்து முடிவு செய்யப்படும்" என்று கூறி  தயாநிதி மாறனின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT