இந்தியா

உ.பியில் ரூ.6000 கோடி செலவில் மாபெரும் உணவுப் பூங்கா: பதஞ்சலி நிறுவனத்திற்கு மாநில அரசு ஒப்புதல் 

ENS

லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.6000 கோடி செலவில் மாபெரும் உணவுப் பூங்கா அமைப்பதற்கு பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 455 ஏக்கரில், ரூ.6000 கோடி செலவில் மாபெரும் உணவுப் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு, பாபா ராம்தேவின் 'பதஞ்சலி ஆயுர்வேத் லிமிட்டட்' நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் இதற்கான நிலம் ஒதுக்குவதில் சுணக்கம் காணப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததன் காரணமாகவும், அரசின் மனப்போக்கு காரணமாகவும் உபியில் உணவுப் பூங்கா அமைக்கும் திட்டத்தில் இருந்து விலகுவதாக, இரு வாரங்களுக்கு முன்பு பதஞ்சலி நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான ஆச்சார்யா பாலகிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

அதன் விளைவாக மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் உடனடியாக செயல்பட்டு பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இருவரிடமும் கலந்து பேசி, உணவுப் பூங்கா அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு கண்டிப்பாக செய்யுமென்று உறுதியளித்தார்.

பதஞ்சலி நிறுவன வேண்டுகோளின்படி பூங்கா அமைப்பதற்குத் தேவையான நிலத்தின் குறிப்பிட்ட பகுதியானது, மூல நிறுவனமான 'பதஞ்சலி ஆயுர்வேத் லிமிட்டட்' நிறுவனதிற்குப் பதிலாக, அதன் துணை நிறுவனமும் இந்த பூங்கா அமைக்கும் பணிகளை முன்னின்று நடத்தப் போகும் 'பதஞ்சலி புட் அண்ட் ஹெர்பல் பார்க் நொய்டா' பேரில் ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகவே மாநில அமைச்சரவையின் புதிய ஒப்புதல் தேவைப்பட்டது.  

அதற்கு ஏதுவாக மத்திய அரசு இதற்காக முன்பு அளித்திருந்த அவகாசமான் ஜுன் 15 என்பதை மாத இறுதியான ஜூன் 30 வரை மாற்றுமாறு, உபி அரசு நேரடியாக மத்திய தொழில் துறைக்கு கடிதம் எழுதியது. 

தற்பொழுது உணவுப் பூங்கா அமைப்பதற்கு பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT