குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி சர்வதேச யோகா தினத்தில் நூதனப் போராட்டம்

சுற்றுப்புற மாசுபாட்டை அதிகரித்து வரும்  குப்பைக் கிடங்கை அகற்றும் விதமாக சர்வதேச யோகா தினத்தில் அப்பகுதி மக்கள் நூதனப் போராட்டம் நடத்தினர். 
குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி சர்வதேச யோகா தினத்தில் நூதனப் போராட்டம்

சுற்றுப்புற மாசுபாட்டை அதிகரித்து வரும்  குப்பைக் கிடங்கை அகற்றும் விதமாக சர்வதேச யோகா தினத்தில் அப்பகுதி மக்கள் நூதனப் போராட்டம் நடத்தினர். 

உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வரும் நிலையில், உத்தரகண்ட் கோலா நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள ஹல்த்வானி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டி, அதே பகுதியில் யோகா செய்து அப்பகுதி மக்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காற்றினால் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், துர்நாற்றத்தை தவிர்க்கவும் முகமுடி அணிந்திருந்தனர்.

இதுகுறித்து அங்கு யோகா பயிற்சியில் ஈடுபட்ட உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில்,

இங்கு அனுமதியின்றி குப்பைக் கிடங்கு இயங்கி வருகிறது. இதனால் சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகளில் மாசு அதிகரித்து வருகிறது. மேலும் நோய் தொற்றுகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து விட்டோம். ஆனால் அதில் எந்தப் பயனும் இல்லை.

தற்போது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இங்கு வருகை தந்துள்ளார். எனவே இப்பிரச்னையை அவரது கவனத்துக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு குப்பைக் கிடங்கில் யோகா செய்தோம் என்றார்.

முன்னதாக, இதே குப்பைக் கிடங்கு உள்ள பகுதி சுத்தமான பூங்காவாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com