இந்தியா

ஏழை மக்களுடனான தொடர்பை பாஜக துண்டித்தது: சிவசேனா குற்றச்சாட்டு

DIN

பாஜக 'சம்பார்க் சே சமார்தன்' என்ற புதிய வழிமுறையை கடைபிடித்து வருகிறது. அதாவலது, 2019 தேர்தலை மனதில் வைத்து கட்சி நிர்வாகிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து பாஜக ஆட்சியின் சாதனைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அதன்படி பாஜக தலைவர்கள் பிரபலங்களை சந்தித்து ஆதரவு சேகரித்து வருகின்றனர். 

இதனை குறிப்பிட்டு தாக்கும் வகையில் சிவசேனா கட்சி தனது செய்தித்தாளில் குற்றம்சாட்டியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, 

" மாதுரி தீக்ஷித், சல்மான் கான், ரத்தன் டாடா, அம்பானி மற்றும் அதானியிடம் ஆதரவை கோருபவர்கள் ஏழை மக்களின் தொடர்பை துண்டித்துவிட்டார்கள். மகாராஷ்டிர மாநிலம் வறுமை மற்றும் பசியால் பாதித்துள்ளது. அது மக்களை குடும்பத்துடன் தற்கொலைக்கு இழுத்துச் செல்கிறது. பிரதமர் மோடி ஏழை மக்களுக்கு ஏதாவது செய்வார் என்ற மாயையில் இருந்து வெளிவர வேண்டும்.

வெளிநாட்டு நிதிகள் மாநிலத்தில் உள்ள ஏழைகளின் நிலைமையை மேலும் மோசமடையவைத்துள்ளது. புல்லட் ரயில், மெட்ரோ மற்றும் ஹைபர் நகர திட்டம் போன்ற ஆடம்பர திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தி விவசாயிகளின் முன்னேற்றம் புறக்கணிக்கப்பட்டுள்ளது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT