இந்தியா

உ.பி., பிகார் இடைத்தேர்தல் முடிவுகள்: படுதோல்வியைச் சந்தித்த பாஜக

Raghavendran

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், அம்மாநில முதல்வராக கடந்த ஆண்டு தேர்வானதைத் தொடர்ந்து, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல், துணை முதல்வராக தேர்வான கேசவ் பிரசாத் மௌர்யா, பூல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து இவ்விரு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில், இரு மக்களவை தொகுதிகளிலும் சமாஜவாதி கட்சி, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்தே தொடர்ந்து முன்னிலை பெற்று, வெற்றிபெற்று இரு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் பூல்பூர் தொகுதியில் சமாஜவாதி கட்சியின் நாகேந்திர பிரதாப்சிங் படேல் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கௌஷலேந்திர சிங் படேலை வீழ்த்தினார். அதுபோல கோரக்பூர் தொகுதியில் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த பிரவீண் குமார் நிஷாத் 21,881 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை வீழ்த்தினார்.

அதுபோல பிகாரில் நடைபெற்ற 3 இடங்களுக்கான இடைத்தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2 இடங்களிலும், பாஜக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

பிகாரின் ஆராரியா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் 61,988 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். ஜெஹனாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரை 35,036 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் வீழ்த்தினார். பாபூவா பேரவைத் தொகுதியில் மட்டும் பாஜகவின் ரிங்கி ராணி பாண்டே 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஷாம்பூ சிங் படேலை தோற்கடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT