இந்தியா

டிடி செய்திக் குழுவினரை தாக்குவதாக எண்ணம் இல்லை: நக்ஸல்

DIN

சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட தாக்குதலில் டிடி செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கொலை செய்வதாக எண்ணம் இல்லை என்று நக்ஸல் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நக்ஸல் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் காவல்துறையினர் இருவர், தூர்தர்ஷன் (டிடி) செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் என 3 பேர் உயிரிழந்தனர்.
 சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு, அடுத்த மாதம் 12, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தாக்குதல் நிகழ்ந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக தடை செய்யப்பட்ட அமைப்பான மாவோயிஸ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "நாங்கள் எப்போதுமே ஊடகம் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதில்லை. டிடி ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹு இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். ஊடகத்தை தாக்க வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இல்லை. தேர்தல் நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணையம் மூலம் நியமிக்கப்படும் ஊடகவியலாளர்கள் இந்தப் பகுதிகளுக்கு பாதுகாப்புப் படையினர் துணை இல்லாமல் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த அறிக்கையில், மாவோயிஸ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டர்பா மண்டல குழு செயலாளர் சாய்நாத் கையெழுத்திட்டிருக்கிறார்.

எனினும், தண்டேவாடா எஸ்பி அபிஷேக் பல்லவ் நக்ஸல்களின் இந்த அறிக்கையை முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில், "கேமிரா ஏன் திருடப்பட்டது? தப்பித்து ஓடும் போது முதன்முதலாக அவர்கள் இரண்டு தானியங்கி ஆயுதங்களை விட்டுச்சென்றனர். ஆனால், கேமிராவை தூக்கி வீசவில்லை. ஏன்? காரணம், முதல் சில நிமிடங்களில் ஊடகம் மீது குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியபோது என்ன நடந்தது என்பதற்கான ஆதாரம் அதில் பதிவாகியுள்ளது. 

ஒளிப்பதிவாளர் எதிர்கொண்ட பல குண்டுகள் பாய்ந்த காயம், மண்டை ஓட்டில் ஏற்பட்ட பல எலும்பு முறிவுகள் ஆகியவை தவறாக தாக்குதல் நடத்தியதாக தென்படவில்லை. அவர், கேமிராவால் போஸ்டரை படம்பிடிப்பதை 10 நிமிடங்கள் பார்த்த பிறகே நக்ஸல் தாக்குதல் நடத்தினர்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT