கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே: அமிர்தசரஸ் நகர அரசு ஊழியர்களுக்கு இரு மடங்கு சம்பளம்!

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகர அரசு ஊழியர்களுக்கு அவர்களது வங்கி சம்பள கணக்கில் இரு மடங்காக சம்பளம் போடப்பட்டுள்ளது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே: அமிர்தசரஸ் நகர அரசு ஊழியர்களுக்கு இரு மடங்கு சம்பளம்!


அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகர அரசு ஊழியர்களுக்கு அவர்களது வங்கி சம்பள கணக்கில் இரு மடங்காக சம்பளம் போடப்பட்டுள்ளது. இதனை அரசு தீபாவளி பரிசாக வழங்கி இருக்கலாம் என நினைத்து பல அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் அவர்களது வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அக்டோபர் மாதம் சம்பளமாக இரு மடங்கு சம்பளம் தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதை கண்டு அரசு ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்கியுள்ளனர் என பல ஊழியர்கள் மகிழ்ந்தனர்.

ஆனால், வங்கியில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக கூடுதலாக ஒரு மாத சம்பளம் செலுத்தப்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களின் தலைவர்களுக்கும் மாவட்ட அரசு கருவூல அதிகாரி ஏ.கே.மைனி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு கருவூலத் துறையின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தவறுதலாக இரு மடங்காக சம்பளம் வழங்கப்பட்டுவிட்டன, விரைவில் அரசு கருவூலம் மூலமாக ஒரு சம்பளம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும். கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை எடுக்க வேண்டாம் எனவும், குறிப்பாக கல்வித்துறை சார்ந்தவர்கள் இரட்டிப்பு சம்பள தொகையை (2வது சம்பளம்) எடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமிர்தசரஸ் மாவட்டத்தில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமாத சம்பளமாக ரூ.40 முதல் 50 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என அரசு ஊழியர்கள் புலம்பியபடி தங்களது வேலையை தொடர்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com