சபரிமலைக்கு செல்ல கணவருடன் வந்த பெண் பக்தரால் பரபரப்பு 

சபரிமலைக்கு செல்ல கணவருடன் வந்த அஞ்சு என்ற பெண் பக்தரால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது. 
சபரிமலைக்கு செல்ல கணவருடன் வந்த பெண் பக்தரால் பரபரப்பு 

பம்பை: சபரிமலைக்கு செல்ல கணவருடன் வந்த அஞ்சு என்ற பெண் பக்தரால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு முயன்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஹிந்து அமைப்பினரும், ஐயப்ப பக்தர்களும் எதிர்க்கட்சியினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் ஐயப்பன் கோயில் நடை 6 நாள்கள் திறந்திருந்தபோது, போலீஸ் பாதுகாப்புடன் சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றனர். எனினும், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களால் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. பின்னர், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களின்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக, இதுவரை 3,371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சம்பவங்கள் தொடர்பாக 545 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த சூழலில், அத்தாழைப் பூஜை எனப்படும் 'சித்திரை ஆட்ட விஷேசம்' விழாவுக்காக, ஐயப்பன் கோயிலின் நடை திங்கள்கிழமை  (நவ.5) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு, தலைமை மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகிய இருவரும் கோயில் நடையை கூட்டாக திறந்து வைத்தனர். சிறப்பு பூஜைக்குப் பிறகு செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்கு கோயில் நடை மூடப்படும். இதையடுத்து அங்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.   

நடை திறப்பை ஒட்டி கமாண்டோ படை உள்பட 2,300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலைக்கு செல்ல கணவருடன் வந்த அஞ்சு என்ற பெண் பக்தரால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

கேரளா மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த அஞ்சு (25) என்ற பெண், சபரிமலைக்கு செல்வதற்காக மாலை போட்டு வந்திருந்த தனது கணவர் மற்றும் இரண்டு குழநதைகளுடன் சேர்ந்து வந்திருக்கிறார். 

சபரிமலைக்குச் செல்வதற்காக பாதுகாப்பு கேட்டு அவர் காவல்துறையிடம் முறையீடு செய்தார். இதன் காரணமாக அவரிடம் பம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அங்கே பரபரப்பு நிலவுகிறது.           

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com