இந்தியா

திட்டமிட்டப்படி நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மாக்-3!

DIN

புதுதில்லி: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை மறுநாள் (நவ.14) மாலை 5.08 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

கஜா புயலால் கடலூர் - ஸ்ரீகரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து, மாக்-3 ராக்கெட் ஏவப்படாது என செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டப்படி நாளை மறுநாள் (நவ.14) மாலை 5.08 விண்ணில் ஏவப்படும். 3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மாக் 3 எடுத்துச் செல்ல இருப்பதாகவும் இஸ்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் இந்திய சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT