அமித் ஷாவின் பெயரில் உள்ள பாரசீக வார்த்தையை மாற்றுவார்களா?

பாஜக ஆளும் சில மாநிலங்களில் நகரங்களுக்கு பெயர் மாற்றப்படும் நிலையில், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் பெயரில் இருக்கும் பாரசீக வார்த்தையை அவர்கள் மாற்றுவார்களா? என்று
அமித் ஷாவின் பெயரில் உள்ள பாரசீக வார்த்தையை மாற்றுவார்களா?

பாஜக ஆளும் சில மாநிலங்களில் நகரங்களுக்கு பெயர் மாற்றப்படும் நிலையில், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் பெயரில் இருக்கும் பாரசீக வார்த்தையை அவர்கள் மாற்றுவார்களா? என்று அகில இந்திய மஜ்லீஸ் இட்டேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதின் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
 கடந்த ஓராண்டில் நாடு முழுவதுமாக 25 நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெயர் மாற்றுவதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் "அலாகாபாத்', "ஃபைஸாபாத்' நகரங்களுக்கு அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
 தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இதுகுறித்து ஒவைசி பேசியதாவது:
 பாஜக ஆளும் மாநிலங்களில் சில நகரங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. "ஷா' என்பது பாரசீக வார்த்தையாகும். பாஜக தலைவர் அமித் ஷா தனது பெயரிலேயே அந்த வார்த்தையை கொண்டுள்ளார். அதை அவர்கள் மாற்றிக் கொள்வார்களா?
 தெலங்கானா தேர்தலில் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பசுக்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அப்படியென்றால் எனக்கும் அந்தக் கட்சி ஒரு பசு வழங்குமா?
 ஒரு பசு நாளொன்றுக்கு 16 கிலோ கால்நடைத் தீவனத்தை உட்கொள்ளும். அந்த வகையில் ஒருநாளுக்கு 16 லட்சம் கிலோ கால்நடைத் தீவனம் தேவையாக இருக்கும். அத்தகைய அளவு தீவனத்துக்கு எங்கிருந்து ஏற்பாடு செய்யப்படும்? இப்போது நான் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக பாஜகவினர் கூறுவார்கள். ஆனால் நான் உண்மையைத் தான் கூறுகிறேன்.
 பாஜக துவேஷத்தை பரப்ப விரும்புகிறது. இதை நாங்கள் வெளிப்படையாகக் கூறுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
 மஜ்லீஸ் கட்சி இல்லா தெலங்கானாவை ஏற்படுத்தப் போவதாக அமித் ஷா கூறியுள்ளார். ஆனால், பாஜக, காங்கிரஸிடம் இருந்து நாங்கள் தெலங்கானாவை விடுவிப்போம் என்று ஒவைசி பேசினார். தெலங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7-ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com