தேர்தல் ஆணையத்தின் பெயரில் இருந்த போலி கணக்குகள் நீக்கம்: சுட்டுரை நடவடிக்கை

தேர்தல் ஆணையத்தின் பெயரில் இயங்கி வந்த இரண்டு போலி கணக்குகளை கண்டறிந்த சுட்டுரை (டுவிட்டர்) நிர்வாகம் அவற்றை நீக்கியுள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர்


தேர்தல் ஆணையத்தின் பெயரில் இயங்கி வந்த இரண்டு போலி கணக்குகளை கண்டறிந்த சுட்டுரை (டுவிட்டர்) நிர்வாகம் அவற்றை நீக்கியுள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். 
இந்திய தேர்தல் ஆணையம் எலெக்ஷன் கமிஷன் மற்றும் தலித் பெடரேஷன் என்ற பெயரில் இரண்டு போலியான சுட்டுரை கணக்குகள் இயங்கி வருவதை கண்டறிந்து, அந்த கணக்குகளை நீக்கி நடவடிக்கை எடுக்க சுட்டுரை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தது. 
தேர்தல் ஆணையம் இதுவரை எவ்வித சுட்டுரையையும் தனது சொந்த பெயரில் இயக்கவில்லை. 
தற்போது, கண்டறியப்பட்டுள்ள இரண்டு போலி சுட்டுரையில் எந்தப் பதிவுகளும் வெளியிடப்படவில்லை. அதேசமயம், இந்த சுட்டுரை கணக்குகளை ஆயிரக்கணக்கானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த சுட்டுரை மூலம் மக்களுக்கு தவறான தகவல்கள் சென்றடையும் அபாயம் இருப்பதாக கருதியே தேர்தல் ஆணையம் அந்த போலி கணக்கை முடக்க நடவடிக்கை மேற்கொண்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com