இந்தியா

மத்திய அரசு - ஆர்பிஐ மோதல் போக்கு நல்லதல்ல

DIN


மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் (ஆர்பிஐ) இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தாது என்று ஆர்பிஐ-யின் பகுதி நேர இயக்குநரான எஸ்.குருமூர்த்தி கூறியுள்ளார்.
ஆர்பிஐ-யிடம் உள்ள ரூ.9.6 லட்சம் கோடி இருப்பில் மூன்றில் ஒரு பங்கு தொகையை மத்திய அரசு கோரியுள்ளதாகவும், அதனைத் தர ஆர்பிஐ மறுத்துவிட்டதால் மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையே பிரச்னை உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர வங்கி வாராக் கடன் பிரச்னையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஆர்பிஐ-யை விமர்சித்தது, ஆர்பிஐ-யின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக ஆர்பிஐ துணை கவர்னர் குற்றம்சாட்டியது ஆகியவை அண்மைக்காலமாக பரபரப்பான பிரச்னையாக உள்ளது.
இந்நிலையில், தில்லியில் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை சார்பில் பொருளாதாரம் தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.குருமூர்த்தி பேசியதாவது:
உலகில் வேறு எந்த நாட்டு மத்திய வங்கியும் வைத்துக் கொள்ளாத அளவுக்கு மிகப்பெரிய தொகையை நமது ரிசர்வ் வங்கி இருப்பு வைத்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை இருப்பு வைத்துக் கொள்ள எவ்வித உறுதியான காரணமும் இல்லை. மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையே மோதல் போக்கு நிலவுவது நல்ல சூழ்நிலையல்ல.
எதிர்பாராத பொருளாதார இடர்பாடுகளை எதிர்கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி 12 முதல் 18 சதவீதம் வரையிலான நிதியை இருப்பில் வைத்திருக்கலாம். ஆனால், இந்தியாவில் ஆர்பிஐ 27 முதல் 28 சதவீத இருப்பு வைத்துள்ளது. ஆர்பிஐ இருப்பது அதிகரிப்பால்தான் நாம் அமெரிக்க டாலருக்கு அதிக விலை கொடுக்க நேரிடுகிறது. இல்லை என்றால் ரூ.45-க்கே நாம் ஒரு அமெரிக்க டாலரை வாங்க முடியும். 
மேலும், நமது நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் அளிக்கும் விதிமுறைகளை எளிதாக்க வேண்டும். ஏனெனில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இத்தொழில்கள்தான் 50 சதவீதம் பங்கு வகிக்கின்றன. மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு, நமது நாட்டில் அளவுக்கு அதிகமான உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 18 மாதங்களில் ரூ.4.8 லட்சம் கோடி உயர் மதிப்பு நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. அவை, கட்டுமானத் துறையிலும், தங்கத்திலும் அதிகம் மாற்றிவிடப்பட்டன. இதனால், சாமானியர்கள் வீடுகளையும், தங்கத்தையும் எளிதில் வாங்க முடியாத நிலை உருவானது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT