சோதனை ஓட்டத்துக்கு தயாராகும் சென்னையின் செல்லப்பிள்ளை ரயில்-18

சென்னையில் உள்ள ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் உருவான என்ஜின்பெட்டி இல்லாத ரயில்-18 சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளது.
சோதனை ஓட்டத்துக்கு தயாராகும் சென்னையின் செல்லப்பிள்ளை ரயில்-18

சென்னையில் உள்ள ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் உருவான என்ஜின்பெட்டி இல்லாத ரயில்-18 சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளது.

சென்னையின் செல்லப் பிள்ளையான ரயில்-18 பரேலி - மொராதாபாத் இடையே இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது. சுமார் ரூ.100 கோடி செலவில் சென்னையில் உள்ள ரயில் இணைப்புப் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் 18 மாதங்களில் இந்த ரயில் கட்டமைக்கப்பட்டது. முதற்கட்ட சோதனையில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பப் பிரச்னைகளை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விரைவில் மக்கள் பணியாற்ற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com