ஆந்திராவில் சிபிஐக்கு தடை: மம்தா பானர்ஜி வரவேற்பு

ஆந்திர மாநிலத்தில் சிபிஐ அமைப்பு தனது அதிகாரத்தை செயல்படுத்துவதற்காக வழங்கியிருந்த பொது ஒப்புதலை அந்த மாநில அரசு
ஆந்திராவில் சிபிஐக்கு தடை: மம்தா பானர்ஜி வரவேற்பு


கொல்கத்தா: ஆந்திர மாநிலத்தில் சிபிஐ அமைப்பு தனது அதிகாரத்தை செயல்படுத்துவதற்காக வழங்கியிருந்த பொது ஒப்புதலை அந்த மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.

சிபிஐ அமைப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனினும், அதன் உயரதிகாரிகள் (சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா) மீது சமீபத்தில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதையடுத்து அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தை நாடிய சம்பவங்களை அடுத்து மாநிலத்தில் சிபிஐ அமைப்பின் செயல் அதிகாரத்துக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளோம். எனவே, இனி ஆந்திர மாநிலத்தில் எந்தவொரு வழக்கு விசாரணையை மேற்கொள்வதாக இருந்தாலும், மாநில அரசின் முன் அனுமதியை சிபிஐ பெற வேண்டும்.

வழக்குகள் விசாரணை தொடர்பாக சிபிஐ அனுமதி கோரும் பட்சத்தில், தேவையான ஒப்புதலை வழங்குவோம். எனினும், மத்திய அரசு அதிகாரிகள் மீதான விசாரணைக்கு முன்பாக சிபிஐ அனுமதி பெற வேண்டியதில்லை. வழக்குரைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகம் கூட, இதேபோன்று சிபிஐக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளது என்று துணை முதல்வர் சின்ன ராஜப்பா கூறினார்.

சிபிஐ செயல் அதிகாரத்துக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெறுவது தொடர்பாக ஆந்திர அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்த உத்தரவில், தில்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டம் 1946-இன் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அந்த அமைப்பைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் (சிபிஐ) ஆந்திர மாநிலத்தில் அமல்படுத்துவதற்கான பொது ஒப்புதலை மாநில அரசு திரும்பப் பெறுகிறது என நேற்று முன் தினம் அறிவித்ததுடன், அதற்கான அறிக்கையும் கெஜட்டில் வெளியிட்டது. 

ஆந்திர அரசின் செயலை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி வரேவெற்றுள்ளார். 

இது குறித்து அவர் கொல்கத்தாவில் நேற்று வெள்ளிக்கிழமை கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ரிசர்வ் வங்கி, சிபிஐ போன்ற அரசு அமைப்புகளை சீரழித்து வருவதுடன், அதன் செயல்பாடுகளை மாற்றுவதற்கு மத்திய அரசு முயலுகிறது. இது அதிகார துஷ்பிரயோகமாகும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

தற்போது ஆந்திர மாநிலத்தில் சிபிஐ அமைப்பு தனது அதிகாரத்தை செயல்படுத்துவதற்காக வழங்கியிருந்த பொது ஒப்புதலை அந்த மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்கிறேன். இதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இனி யாரையும் சிபிஐயை வைத்து மத்திய அரசு மிரட்ட முடியாது. மேற்கு வங்கத்திலும் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com