ஆர்பிஐ சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு?

இந்திய ரிசர்வ் வங்கிக்கும் (ஆர்பிஐ), மத்திய நிதியமைச்சகத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், ஆர்பிஐ சட்டம் 1934-இல் திருத்தம் மேற்கொள்ள மத்திய
ஆர்பிஐ சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு?


இந்திய ரிசர்வ் வங்கிக்கும் (ஆர்பிஐ), மத்திய நிதியமைச்சகத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், ஆர்பிஐ சட்டம் 1934-இல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சட்டம் இதுவரை 19 முறைத் திருத்தப்பட்டுள்ளது. இப்போது ஆர்பிஐ கையில் உள்ள கூடுதல் நிதி இருப்பு, மிகுதியாக உள்ள லாபத்தை பரிமாற்றம் செய்வது தொடர்பான சட்டப் பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. 84 ஆண்டு கால ஆர்பிஐ வரலாற்றில் இந்தச் சட்டப் பிரிவு இதுவரை மாற்றத்தை சந்திக்காமல் இருந்தது.
மற்ற பொதுத் துறை வங்கிகளின் லாபம் எவ்வாறு பகிரப்பட வேண்டும் என்பது குறித்து விதிகள் உள்ளன. ஆனால், ஆர்பிஐ-யில் இது தொடர்பான விதிகள் இல்லை. எனவே, அவற்றை ஏற்படுத்தும் நோக்கில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி ஆர்பிஐ-யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.36 லட்சம் கோடியாக உள்ளது. இதன் கையிருப்பு ரூ.9.6 லட்சம் கோடியாக உள்ளது. இதில் நெருக்கடி கால நிதியாக மட்டும் ரூ.2.3 லட்சம் கோடி உள்ளது. சட்டத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக பரிந்துரைக்க நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அமைக்கும் என்று தெரிகிறது. இது போன்று நிபுணர்கள் குழு அமைக்கப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு 1997-இல் வி. சுப்பிரமணியன் குழு அளித்த பரிந்துரையில், ஆர்பிஐ-யின் மொத்த சொத்து மதிப்பில் 12 சதவீதம் நெருக்கடி கால நிதியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டு இந்த நிதியை 18 சதவீதமாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டது. 2013-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட பரிந்துரையில், ஆண்டுதோறும் லாபத்தில் ஒரு பகுதி நெருக்கடி கால நிதிக்கு மாற்றப்பட வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com