காஷ்மீர் பேரவை இப்போது கலைப்பு இல்லை: ஆளுநர் திட்டவட்டம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை, இப்போதைக்கு கலைக்கப்படாது என்று அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை, இப்போதைக்கு கலைக்கப்படாது என்று அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி டிசம்பர் 19-ஆம் தேதி முடிவடையவுள்ளது. ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டப்படி, அங்கு 6 மாதத்துக்கு மேல் ஆளுநர் ஆட்சியை நீட்டிக்க முடியாது. எனவே, ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் மேற்கண்ட கருத்தை ஆளுநர் தெரிவித்துள்ளார். 
முன்னதாக, மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆட்சிக்கு அளித்த வந்த ஆதரவை, பாஜக கடந்த ஜூனில் வாபஸ் பெற்றது. இதனால், அங்கு ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை முடக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பேரவையை கலைத்துவிட்டு, தேர்தல் நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி ஆகியவை வலியுறுத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com