அமிருதசரஸ் குண்டுவீச்சு தாக்குதல்: 3 பேர் பலி, 10 பேர் காயம்

அமிருதசரஸ் அட்லிவால் கிராமத்தில் உள்ள நிரன்கரி பவன் அரங்கில் நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 
அமிருதசரஸ் குண்டுவீச்சு தாக்குதல்: 3 பேர் பலி, 10 பேர் காயம்

அமிருதசரஸ் அட்லிவால் கிராமத்தில் உள்ள நிரன்கரி பவன் அரங்கில் நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் அட்லிவால் எனும் கிராமத்தில் உள்ள நிரன்கரி பவன் அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மத வழிபாட்டு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. இதில், ஏறத்தாழ 500 பேர் பங்கேற்றிருந்தனர். அப்போது, அந்த அரங்கில் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் நடுவே குண்டை வீசியுள்ளனர். 

இதனால், கூட்டத்தில் இருந்தவர்களுள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குருநானக் தேவ் மற்றும் ஐவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

"தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதற்கான ஆதாரங்களை திரட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது" என்றார். 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார். 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுதொடர்பாக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிடம் கேட்டறிந்தார். மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com