ராஜஸ்தான் தேர்தல்: காங்கிரஸின் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 200 தொகுதிகளுக்கான வாக்குகள் டிசம்பர் 11 -ஆம்
ராஜஸ்தான் தேர்தல்: காங்கிரஸின் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 200 தொகுதிகளுக்கான வாக்குகள் டிசம்பர் 11 -ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சியை தோற்கடிக்கும் முனைப்புடன் செயல்படும் காங்கிரஸ், அக்கட்சியின் சார்பாக 152 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வியாழக்கிழமை இரவு வெளியிட்டது. நடப்பு பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்களில் 20 பேருக்கு மீண்டும் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.

இதனையடுத்து நேற்று சனிக்கிழமை இரண்டாம் கட்டமாக 32 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், 18 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

காங்கிரஸில் 19 பெண் வேட்பாளர்களுக்கும், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 9 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்சி தாவியவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், முன்னாள் பாஜக எம்.பி. ஹரிஷ் மீனா உள்பட புதிதாக காங்கிரஸில் இணைந்த 4 பேருக்கு அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது.

முன்னதாக, வேட்பாளர் பட்டியலில் முன்னாள் பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் பெயரும் இடம்பெற்றுள்ளது. முதல்வர் வசுந்தரா ராஜே நிற்கும் ஜல்ராபதான் தொகுதியில், அவரை எதிர்த்து மன்வேந்திர சிங் போட்டியிடுகிறார். 

பாஜக கட்சியில் இருந்து விலகி அக்டோபர் மாதம் காங்கிரசில் இணைந்த மன்வேந்திர சிங், தற்போது காங்கிரஸ் சார்பில் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கே எதிராக போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

பாஜக கட்சி சார்பில் 162 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில் 19 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டாலும், முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com