இந்தியா

தெருநாய்கள் கொல்லப்பட்ட விவகாரம்: கர்நாடக அரசு அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல்

DIN


தெருநாய்களை அதிகளவில் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கர்நாடக நகராட்சி அமைப்பின் தலைமை அதிகாரி மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், அவர்கள் இருவருக்கும் இதுதொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு 
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம், சகலேஷபுரா நகராட்சி ஆணையர் வி.டி. வில்சன், தனியார் ஒப்பந்தக்காரர் ஜார்ஜ் ராபர்ட் ஆகியோர் தெரு நாய்களை அதிகளவில் கொன்றதாகவும், விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதாகவும் விலங்குகள் நல ஆர்வலர் நவீனா காமத் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
அந்த மனு நீதிபதிகள் என். வி. ரமணா மற்றும் எம்.எம். சந்தானகெளடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக வாதாடிய வழக்குரைஞர் சித்தார்த் கார்க் கூறுகையில்,  விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு சட்டம் ஆகிய இரண்டையும் உள்ளாட்சி நிர்வாகங்கள் அனைத்தும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த இரண்டு சட்டங்களின்படி, தெருநாய்களை பிடித்து சென்று கருத்தடை, தடுப்பூசி ஆகியவை போடப்பட்ட பின்பு, நாய்கள் பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்ப விட வேண்டும். ஆனால் வில்சனும், ஜார்ஜும் இதை மீறியுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
அதையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, வில்சன், ஜார்ஜ் இருவரும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நவீனா காமத் தாக்கல் செய்த மனுவில், சகலேஷபுரா நகராட்சியில் உள்ள தெருநாய்களை பிடிப்பதற்காக ஆணையர் வில்சன், ஜார்ஜுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். 350 தெருநாய்களை அகற்றுவதற்காக அவருக்கு ரூ. 91, 537 அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வேண்டுமென்றே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளனர். இந்த மாதிரி தீர்ப்பை மீறுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் யார் வேண்டுமானாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT