மேற்கு வங்கத்தில் மருத்துவமனை பிரசவங்கள் அதிகரிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெறுவது அதிகரித்துள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கை
மேற்கு வங்கத்தில் மருத்துவமனை பிரசவங்கள் அதிகரிப்பு


மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெறுவது அதிகரித்துள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கை 96 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை தெரிவித்தார்.
உலக குறைப் பிரசவ விழிப்புணர்வு தினத்தையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மம்தா இதனை தெரிவித்தார். தனது தலைமையிலான அரசு மாநிலம் முழுவதும் தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதுடன், கடுமையாக பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
இதுகுறித்து தனது சுட்டுரையில் மம்தா குறிப்பிடுகையில் இன்று குறைப் பிரசவ விழிப்புணர்வு தினம். நமது மாநில அரசு கர்ப்பிணி தாய்மார்களின் நலனையும், குழந்தை பிரசவித்த தாய்மார்களின் நலனைக் காப்பதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறது. பின்தங்கிய பகுதிகளிலும், குடிசைகளிலும் வசிக்கும் பெண்களுக்கு தரமான மருத்துவ சுகாதார வசதிகளை செய்து தர அரசு காத்திருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் 65 சதவீதமாக இருந்த மருத்துவமனை பிரசவ எண்ணிக்கை 96 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 
உலக குறைப் பிரசவ விழிப்புணர்வு தினத்தையொட்டி இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, குறைப் பிரசவ குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்
கொள்ளப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com