சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி தேவசம்போர்டு மனு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு அளித்தத் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல் செய்துள்ளது.
சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி தேவசம்போர்டு மனு


புது தில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு அளித்தத் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல் செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், சபரிமலைக்கு பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறி வருகிறது.

தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை ஜனவரி 22ம்  தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி தேவசம்போர்டு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com