ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க பிடிபி, என்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி திட்டம்?

ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சித் தலைவர் அட்லஃப் புகாரி தலைமையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சி இணைந்து மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க பிடிபி, என்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி திட்டம்?

ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சித் தலைவர் அட்லஃப் புகாரி தலைமையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சி இணைந்து மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஜம்மு காஷ்மீரில், ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது அடுத்த மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில், பிடிபி கட்சித் தலைவர் புகாரி தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவர் ஓமல் அப்துல்லாவை அழைத்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

அதன்பிறகு பிடிபி, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகள் இடையே மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது. 

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய புகாரி, 

"மாநிலத்தின் சிறப்பு அடையாளத்தை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பாதுகாக்க எனது தலைமையில் கூட்டணி அமைக்க 3 கட்சிகளும் (காங்கிரஸ், பிடிபி மற்றும் தேசிய மாநாடு) ஒப்புக்கொண்டுள்ளது. விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்" என்றார்.     

மாநில காங்கிரஸ் தலைவர் ஜிஏ மிர் கூறுகையில், "ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி, நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த செயல்பட்டு வருகிறது" என்றார்.  

3 கட்சிகளும் இணைந்து ஆளுநர் சத்ய பால் மாலிக்கை இன்று (புதன்கிழமை) அல்லது நாளை சந்தித்து ஆட்சி அமைக்க கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, பாஜக தலைவர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் கவிந்தர் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாகிஸ்தானின் அறிவுறுத்தலின்படி பாஜகவை ஆட்சியில் அப்புறப்படுத்த இந்த 3 கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கவுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com