இந்தியா

சபரிமலையில் 144 தடை உத்தரவு ஏன்? கேரள உயர் நீதிமன்றம் அரசுக்குக் கேள்வி

DIN

சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது ஏன் என்று கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்துக்குள் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், கோயிலுக்குள் பெண் பக்தர்கள் நுழைய முயலும் போது அதனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டதால், சபரிமலை கோயில் வளாகத்துக்குள் காவல்துறையினர் 144 தடை உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT