கஜா புயல் பாதிப்பு: தமிழக அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிதி கேட்டிருப்பதாக தகவல்

கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டிருப்பதாகவும், புயல் பாதிப்பு தொடர்பான விவரங்களை
கஜா புயல் பாதிப்பு: தமிழக அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிதி கேட்டிருப்பதாக தகவல்


புதுதில்லி: கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டிருப்பதாகவும், புயல் பாதிப்பு தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதோடு ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்தப் புயல் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளது. வீட்டை இழந்து, கால்நடைகளை இழந்து, உணவுப்பயிர்கள் அனைத்தும் அழிந்து மக்கள் அனைவரும் நிர்க்கதியாக நிற்கின்றனர். நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. முந்திரி, சவுக்கு, மா, பலா உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்தச் சூழலில், அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, அரசு மறுபரிசீலனை செய்து, ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் வகையில் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்து தரப்பிலும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிவாரணமும், இடைக்கால நிவாரண நிதியாக ரூ.1,500 கோடியை உடனடியாக தர தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், புயல் பாதிப்பு தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் கோரிக்கையை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை 9.45 மணியளவில் சந்திக்கும் முதல்வர் பழனிசாமி நிதி கோரிக்கை குறித்து வலியுறுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com